மஞ்சள் மகிமை

Curcumin

மஞ்சளின் மகிமை அனைத்தும் அதில் உள்ள குர்கியுமின் எனும் மூலப்பொருளில் அடங்கி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக சமைக்கையில் மஞ்சளின் ஜீவநாடியான கியுர்க்குமின் அழிந்துவிடுகிறது. அதனால் சமைத்து முடித்தபின் மஞ்சளை மேலே பொடியாக தூவி பரிமாறினால் கீழ்காணும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
கியுர்குமின் 70 வகையான வியாதிகளை குணமாக்குவதாக ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரகணக்கான ஆய்வுகள் கூறுகின்றன. அத்தனையையும் பட்டியலிட ஆயுள் போதாது. சுருக்கமாக சொன்னால் மஞ்சளால் காக்கபடாத உடல் உறுப்பே கிடையாது எனலாம்.
கியுர்குமின் அற்புதமான பெயின் கில்லர். ஆய்வு ஒன்றில் பிரிஸ்க்ரிப்ஷன் மருந்தான செலெப்ரக்ஸ் இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயங்களை எந்த அளவு ஆற்றுகிறதோ, அதை விட விரைவாக கிர்கியுமின் உள்காயங்களை ஆற்றுவதாக கண்டுபிடித்துள்லார்கள். மார்பக புற்றுநோயை தடுக்க வல்லது ஃடமோபோக்ஸின் எனும் மருந்து. ஆனால் ஆய்வு ஒன்றில் அதை விட அதிக செயல்திறனுடன் பிரஸ்ட் கான்சரை தடுக்கவல்லது கிர்கியுமின் என கண்டுபிடித்துள்ளார்கள்.
“ஆயுள் முழுக்க ஒரே ஒரு மூலிகையை தான் தேர்ந்தெடுக்கவேண்டும். வேறு எதையும் சாப்பிட கூடாது” என்றால் நான் மஞ்சளை தேர்ந்தெடுப்பேன்” என்கிறார் மருத்துவர் டேடிவ் ப்ராவ்ளி
மஞ்சள்:
கான்சரை உருவாக்கும் ஜீன்கள் ஆக்டிவ் ஆகாமல் தடுக்கிறது
டியூமர் செல்கள் பரவும் வேகத்தை தணிக்கிறது’
நார்மல் செல் கான்சர் செல் ஆவதை மட்டுபடுத்தி தடுக்கிறது
கான்சர் செல் ஆக மியூடேட் ஆன செல்களை கொல்கிறது
டியூமர் உள்ளுறுப்புகளுக்கு பரவாமல் தடுக்கிறது
கான்சர் செல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து அவற்றை செயலிழக்க வைக்கிறது
கிமியோதெரபி செய்பவர்களுக்கு அதன் விளைவை பலமடங்கு அதிகரிக்கிறது
மஞ்சள் 22 வகை கான்சர்களை எதிர்த்து போரிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை: மார்பக புற்றுநோய், கலோன், லங், புராஸ்டேட்
இதுபோக மருத்துவமே குணப்படுத்த திணறும் மூளை கான்சர், பிளட் கான்சர், லிவர் கான்சர், பான்க்ரியாஸ் கான்சர், கர்ப்பபை கான்சர், மெலனாமா எனும் ஸ்கின் கான்சர் முதலானவற்றை கூட மஞ்சள் குணமாக்கும் ஒளஷதமாக பயன்படுகிறது
ஆய்வு ஒன்றில் பிரஸ்ட் கான்சர் வந்தவர்களுக்கு டாக்சால் எனும் மருந்தை கொடுத்து வந்தார்கள். அத்துடன் கியுர்கமின் சேர்த்தபோது அந்த மருந்தின் வீர்யம் பல மடங்கு அதிகரித்ததுடன், அதன் பின்விளைவுகளையும் மஞ்சள் மட்டுபடுத்தியது
மெனோபாஸ் ஜர்னல் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் ப்ரஸ்ட் கான்சர் வந்த பெண்கள் எஸ்ட்ரோஜன் சப்ளிமெண்ட்டுடன் மஞ்சளை சேர்த்துகொள்கையில் மருந்தின் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதாக அகண்டுபிடித்தார்கள்.
கலோன் கான்சர்:
பெரும்குடலில் பாலியாப்ஸ் எனும் சிறுகட்டிகள் உருவாவது கலோன் கான்சர் வருவதற்கான காரணம். ஆய்வு ஒன்றில் க்வெர்செடின் எனும் மருந்து 20 மிகியுடன் 480 மிகி கியுர்ம்யுமினை உட்கொள்வது பாலியாப்ஸ் வருவதை தடுப்பதாக கண்டறிந்துள்லார்கள். க்வெர்சடின் என்றால் என்னவோ ஏதோ என நினைத்துவிடவேண்டாம். அதன் மூலப்பொருள் சாட்சாத் நம் வெங்காயமே தான்!!!!!
பச்சை வெங்காயம் + சமைக்காத மஞ்சள் = கலோன் கான்சருக்கு மருந்து
கெர்விகல் கான்சர்:
கெர்விகல் கான்சர் வர காரணம் பாபில்லோமைவைரஸ் எனும் வைரஸ். அதை அழிக்கும் சக்தி கொண்டது கியுர்க்யுமைன்
நுரையீரல் கான்சர்:
புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 16 பேர் தினம் 1500 மிகி கியுர்க்யுமின் உட்கொண்டார்கள். 30 நாட்கள் கழித்து அவர்களின் சிறுநீரை ஆராய்ந்ததில் புகைபிடித்ததால் உடலில் எத்தனை புகையிலை சம்பந்தப்பட்ட விஷங்கள் உடலில் சேர்ந்தனவோ, அதை விட அதிக கழிவுகளை அவர்கள் உடல் வெளியேற்றி இருந்தது கண்டுபிடிக்கபட்டது. கியுர்க்யுமின் உட்கோள்லாத புகைபிடிப்பாளர்கல் உடலில் இத்தகைய மாற்றம் எதுவும் நிகழவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.